என் மலர்

  நீங்கள் தேடியது "Finish"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் கோடை கால கூடைபந்து பயிற்சி நடைபெற்றது.
  • பயிற்சியில் கலந்து கொண்ட 50 வீரர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.

  நெல்லை:

  கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் நெல்லையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றது. பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் கோடை கால கூடைபந்து பயிற்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

  அதன் நிறைவு நாளையொட்டி நடந்த விழாவில் கல்லூரி முதல்வர் மரியதாஸ், செயலாளர் புஷ்பராஜ், சீனிக்குமார், பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தினகரன், நெலலை மாவட்ட கூடைப்பந்தாட்ட பொருளாளர் செல்வகோபால், முன்னாள் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் சரவணமுத்து, கிருஷ்ணபிரபு, சாக்ரடீஸ், ஜேம்ஸ் ஜெப்ரி, சீனிவாசன், நித்திஷ், பாக்கியவதி, அருணாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  விழாவில் பயிற்சியில் கலந்து கொண்ட 50 வீரர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.

  ×