என் மலர்
நீங்கள் தேடியது "Fines for shops violating the rules"
- ஜவுளி கடைகள், சுவீட் கடைகள், வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு செய்தனர்.
- ஆய்வின்போது சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று சோதனை நடத்தினர்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் சேலம், ஆத்தூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு ஜவுளி கடைகள், சுவீட் கடைகள், வணிக நிறுவனங்களில் அதிரடி ஆய்வு செய்தனர். ஆய்வின்போது சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று சோதனை நடத்தினர். அப்போது சட்ட விதிகளை கடைபிடிக்காதது, மறு முத்திரை செய்யப்படாத எடையளவுகள், பொட்டல பொருட்களில் அறிவிக்கை இல்லாமல் விற்பனை செய்வது என்பது உள்ளிட்ட முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து வணிக, ஜவுளி, சுவீட் நிறுவ னங்க ளுக்கு ரூ.55 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது தொழிலாளர் துணை ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.






