என் மலர்

  நீங்கள் தேடியது "fields medal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கணிதத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஃபீல்ட்ஸ் பதக்கத்தை இந்திய வம்சாவளி ஆசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. #FieldsMedal #AkshayVenkatesh
  பிரேசிலியா:

  கணிதத்துறையில் மிக சிறப்பாக தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தும் மேதைகளுக்கு சர்வதேச கணித கூட்டமைப்பு சார்பில் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஃபீல்ட்ஸ் விருதுக்கு 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  அதில் அக்‌ஷய் வெங்கடேஷும் ஒருவர். அக்‌ஷய் தனது 2 வயதில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து விழங்கிய அக்‌ஷய் தனது 20-வது வயதில் பி.எச்.டி பட்டத்தை வென்றார். இவர் தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

  36 வயதான அக்‌ஷய் வெங்கடேஷ், கணிதத்துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு காரணமாக ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றுள்ளார்.

  நோபல் பரிசுக்கு இணையாக கணிதத்துறையில் இந்த ஃபீல்ட்ஸ் பதக்கம் கவுரவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #FieldsMedal #AkshayVenkatesh
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரேசிலில் நோபல் பரிசுக்கு நிகராக கணிதத்துறைக்கு வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில், விருது திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FieldsMedal #NobelPrize #CaucherBirkar
  பிரேசிலியா:

  உலகின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான நோபல் பல்வேறு முக்கிய துறைகளில் சிறப்பாக செயல்படும் மேதைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். கணிதத்துறைக்கு நோபல் பரிசுக்கு இணையாக ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்படும். ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச கணித கூட்டமைப்பின் சார்பில் சிறந்த கணித மேதை தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு இந்த பதக்கம் வழங்கப்படும்.

  இந்த ஆண்டு கணிதத்துறைக்கான ஃபீல்ட்ஸ் பதக்கம் காவ்சர் பிர்கார் என்பவருக்கு வழங்கப்பட்டது. இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கு அளிக்கப்பட்ட பதக்கத்தை தனது பெட்டியில் வைத்திருக்கிறார் காவ்சர் பிர்கார். சிறிது நேரத்துக்கு பிறகு பெட்டி திருடு போனதை அறிந்த அவர், உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் புகார் அளித்துள்ளார்.

  இதுதொடர்பாக உடனடியான சோதனை செய்து பார்த்தபோது, அரங்கத்தில் காலியாக இருந்த பெட்டியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் திருடனை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இந்த ஃபீல்ட்ஸ் பதக்கத்தின் விலை 4 ஆயிரம் டாலர்கள் எனவும், அரங்கத்துக்குள்ளேயே உயர்ந்த பரிசு திருடு போனது இதுவே முதல்முறை என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  #FieldsMedal #NobelPrize #CaucherBirkar
  ×