என் மலர்
நீங்கள் தேடியது "Field water testing"
- தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியமும், ஜல்ஜீவன் இணைந்து நடத்திய களநீர் பரிசோதனை பயிற்சி முகாம்.
- தண்ணீரின் தரம், தண்ணீரின் சேமிப்பு, பாதுகாப்பு, தண்ணீரால் பரவும் நோய்கள், நீர் மாசு குறித்து விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளிக்கபட்டது.
சிவகிரி:
தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியமும், தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் இணைந்து நடத்திய களநீர் பரிசோதனை பயிற்சி முகாமை நிர்வாகப் பொறியாளர் கோபால் (திட்ட மற்றும் பராமரிப்பு கோட்டம்) தலைமை தாங்கி தென்காசி யூனியனில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி நிர்வாக பொறியாளர் ஆதிநாராயணன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 யூனியன்களில் பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற செயலர், மக்கள் நல ஒருங்கிணைப்பாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான களநீர் பரிசோதனை பயிற்சி முகாம் வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் வைத்து நேற்று நடைபெற்றது. யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கடேசன் வரவேற்று பேசினார்.
பயிற்சி முகாமில் ராஜேஸ்வரி, பிரபாவதி, தனசேகரன், முருகன் ஆகியோர் தண்ணீரின் தரம், தண்ணீரின் சேமிப்பு, பாதுகாப்பு, தண்ணீரால் பரவும் நோய்கள், நீர் மாசு குறித்து விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தனர். பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.






