search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female Doctor Suicide"

    • உயிர்களை காப்பாற்ற வேண்டிய டாக்டரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி சுமித்ரா. இவர்கள் மகள் மதுமிதா (வயது26). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு முடித்து விட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    மகளின் மருத்துவ படிப்பு மற்றும் புதிதாக வீடு கட்ட நாராயணசாமி பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். மேலும் அவர் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாததால் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

    மேலும் மது பழக்கமும் இருந்ததால் மனஉளைச்சலில் இருந்த மதுமிதா மற்றும் சுமித்ரா ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி மதுமிதா விஷ மருந்தையும், சுமித்ரா அதிக அளவில் சர்க்கரை நோய் மாத்திரைகளையும் தின்று தற்கொலைக்கு முயன்றனர். வீட்டில் மயங்கி கிடந்த இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 2 பேரையும் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மதுமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுமித்ரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இது குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிர்களை காப்பாற்ற வேண்டிய டாக்டரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவருடன் சேர்ந்து இருக்க முடியவில்லை, குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    • தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (வயது 32). வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் செல்வகுமார் என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இருவரும் வேலூர் தொரப்பாடி காந்தி நகரில் வசித்து வந்தனர்.

    டாக்டர் தம்பதியான இவர்களுக்கு குழந்தை இல்லை. காயத்ரி வீட்டில் இருக்கும்போது செல்வகுமாரும், அவர் வீட்டில் இருக்கும் போது காயத்திரியும் பணிக்கு சென்று வந்தனர்.

    இதனால் இருவரும் வீட்டில் ஒன்றாக இருக்க முடியவில்லை. இது குறித்து காயத்ரி அடிக்கடி செல்வகுமாரிடம் உருக்கமாக பேசியுள்ளார்.

    இந்த நிலையில் செல்வகுமார் டெல்லி சென்றிருந்தார். அங்கிருந்து போனில் அவரது மனைவியிடம் பேசியுள்ளார். பின்னர் மாலையில் போன் செய்தபோது காயத்ரி போனை எடுக்கவில்லை.

    டெல்லியில் இருந்து நேற்று இரவு செல்வகுமார் வீடு திரும்பினார்.

    அவர் வீட்டில் வந்து பார்த்தபோது அங்குள்ள அறையில் காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    கணவருடன் சேர்ந்து இருக்க முடியவில்லை, குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×