என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Female Doctor Injury"

    தாம்பரம் அருகே ஆட்டோ டிரைவருக்கு தீடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஆட்டோ ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது.
    தாம்பரம்:

    கிழக்கு தாம்பரம், கண்ணகி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). ஆட்டோ டிவைர். இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் தனது 2 குழந்தைகளையும் இவரது ஆட்டோவில் செம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்றார்.

    குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு அதே ஆட்டோவில் மீண்டும் வீடு திரும்பினார். ஆட்டோ ‘கேம்ப்’ ரோட்டில் வந்த போது டிரைவர் ராஜேந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    எனவே அவரால் ஆட்டோவை ஓட்ட முடியவில்லை. இதனால் நடுரோட்டில் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    உடனே அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை மீட்டனர். அதில் மயங்கி கிடந்த டிரைவர் ராஜேந்திரனை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

    இந்த விபத்தில் பெண் டாக்டரின் காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு அவர் சிகிச்சை பெற்றார். #tamilnews
    ×