என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Federation of Deaf"

    • அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும்

    கோவை :

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும். வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும். மாதாந்திர உதவித் தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும், கொக்ககோலா நிறுவனங்களில் ஒப்பந்த காதுகேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கை பதாகைகளை ஏந்தியும், விசில் ஊதி, கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசுக்கு ஆவணம் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×