என் மலர்
நீங்கள் தேடியது "Farmers are frustrated"
- விவசாயிகள் விரக்தி
- மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
மணல் கொள்ளை
இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டு அவர்களின் துறைகளில் இருக்கும் திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வாறு பயன் பெறும் என்பதனை எடுத்துறைத்தார்கள்.
பரபரப்பாக நடந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
பொய்கை பாலாற்று பகுதியில் அளவுக்கு அதிகமாக மணல் கடத்தப்படுவதாகவும், மேலும் அனுமதிக்கும் அளவை விட 30 மடங்கு அதிகமாக சுரண்டப்பட்டு வருகின்றனர்.
இதனால் விவசாயம் வெகுவாக பாதிக்கின்றது. வரும் மாதங்கள் கோடைக்காலம் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. இவர்கள் அளவுக்கு அதிகமாக மணல் திருடப்படுவதால் விவசாயிகள் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என புலம்புகின்றனர். உடனடியாக மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் கூறினர். இதனையடுத்து துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகையில், வேளாண்துறையில் 3 வகையான மா செடிகளை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதில் 2.5 ஏக்கர் அளவு பரப்பளவு உடைய நிலத்திற்க்கு 156 செடிகள் கொடுக்கப்படுகிறது. இதற்க்கான ஆவனங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவசாயிகளுக்கு 5 வகையான பயிர்களுக்கு காப்பிட்டு திட்டம் உள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையலாம் என கூறினார்.
இதனையடுத்து தாசில்தார் கூறுகையில் -
அணைக்கட்டு தாலுக்காவிற்க்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புரம்போக்கு நிலத்தில் இருக்கும் சீம கருவேலம் மரங்கள் இலவசமாகவே யாருவேனுமானாலும் வெட்டி எடுத்துக்கொள்ளலாம்.
இவை தேவை என்றால் மனு ஒன்று கொடுத்து அதற்க்கான ஒப்புதல் படிவம் பெற்று இலவசமாக எவ்வளவு வேண்டும் என்றாலும் வெட்டிக் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினார்.
கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தை கவனிக்காமல் சிலர் போன்களை பார்த்துக்கொண்டு இருந்ததாலும், சிலர் உறங்கிக்கொண்டு இருந்ததாலும், சிலர் நாம் ஏன் வந்தோம் எனவே தெரியாமல் இருந்ததால் சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பு எற்ப்பட்டது.
இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.






