search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "family function"

    மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #MexicoShooting
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாகாணம் அமைந்துள்ளது. வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன் நகரில் குடும்ப விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரூ மர்ம நபர் திடீரென அங்கு புகுந்தார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை, 5 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MexicoShooting
    மதுரை கூடல்நகர் வர்த்தக சங்க குடும்ப விழாவில், பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பெயரில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. #MaduraiTradeAssociation
    மதுரை:

    மதுரை கூடல் நகர் வர்த்தக சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு குடும்ப விழா, அஞ்சல் நகர் புஷ்பம் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத் தலைவர் இரா.கண்ணன் தலைமை தாங்கினார். விழாவின் துவக்கமாக டாக்டர் அப்துல் கலாம் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத்தின் நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டு, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் உரையாற்றினர்.



    விழாவில் கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன், விக்னேஸ்வர் எண்டர்பிரைசஸ் பழனிராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அரசு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று மாணவ-மாணவிகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பெயரில் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.

    விழாவில் சங்க துணைத் தலைவர்கள் தங்கம் என்ற தங்கராஜ், முருகன், சோமசுந்தரம், பொருளாளர் பாலமுருகன், சட்ட ஆலோசகர் சந்திரசேகர், இணை செயலாளர் லெட்சுமணன், துணை செயலாளர் முத்துகலா, செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீசன், சொக்கலிங்கம், ரமேஷ், அப்துல் சம்மது, மிராண்டா, சுரேஷ் குமார், செல்வகுமார், முத்துப்பாண்டி, கெமிலஸ், சீதாராமன், சங்க கணக்கர் வெங்கடேஷ் மற்றும் உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். #MaduraiTradeAssociation
    மகாராஷ்டிராவில் விருந்து நிகழ்ச்சியின்போது உணவு சாப்பிட்டு 5 பேர் பலியானதற்கு காரணமான, பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ராய்காட்:

    மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தில் கடந்த 18-ம் தேதி சுபாஷ் மானே என்பவரின்  வீட்டு கிரகப்பிரவேசம்  நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. பெரியவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 120 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.

    இந்த சம்பவம் குறித்து காலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டு உரிமையாளர் மீது பொறாமை கொண்ட நபர்கள், உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில், பிரத்னியா (வயது 23) என்ற பெண்ணை பிடித்து விசாரித்ததில், அதிர்ச்சி தகவல் வெளியானது.

    சுபாஷ் மானேவின் நெருங்கிய உறவினரான அந்த பெண் கோபோலியைச் சேர்ந்தவர். இவர், குடும்ப சண்டை காரணமாக தன் கணவர், மாமியார், 2 நாத்தனார்கள் மற்றும் சுபாஷ் மானே குடும்பத்தினரைத் தீர்த்துக் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக விருந்தின்போது பறிமாறப்பட்ட குழம்பில் பூச்சி மருந்தை கலந்துள்ளார். விஷம் கலந்ததை ஒப்புக்கொண்டதையடுத்து பிரத்னியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். #FoodPoisoningDeath
    ×