என் மலர்

  நீங்கள் தேடியது "fall of Islamic State caliphate"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிரியா நாட்டு மண்ணில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை துடைத்தெறிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். #Trumphails #IslamicStatecaliphate #fallofIS #IslamicStateinSyria
  வாஷிங்டன்:

  ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சில பகுதிகளை கடந்த 2014-ம் ஆண்டுவாக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கிருந்தவாறு உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட்பட்ட ஆட்சியை நிறுவப்போவதாக பிரகடனப்படுத்தி இருந்தனர்.

  கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் கைது செய்து சுட்டுக் கொன்றதுடன் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு ராணுவ வீரர்களின் தலைகளை வெட்டித் துண்டித்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருநாடுகளிலும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர்.

  ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 88 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவிலான நிலப்பரப்பை இந்த பயங்கரவாதிகள் கைப்பற்றி வைத்திருந்தனர். அரசுப்படைகள் தாக்குதல் நடத்த இங்கு வந்தபோது பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி போரிட்டனர்.

  ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க விமானப்படை மற்றும் தரைப்படையினரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டனர். அவர்களின் பிடியில் சிக்கியிருந்த பல பகுதிகளை அரசுப்படைகள் கைப்பற்றின.

  ஈராக் மற்றும் சிரியாவில் அரசுப்படைகளின் ஆவேசமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத பயங்கரவாதிகளில் பலர் சரணடைந்தனர். உயிர் பயத்தில் சிலர் பாலைவனப் பகுதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். ஈராக்கில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டதாக அந்நாட்டு அரசு கடந்த 2017-ம் ஆண்டில் அறிவித்தது.

  இதேபோல், சிரியாவிலும்  ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த கடைசி பகுதியான பாகுஸ் நகரை கைப்பற்ற சில மாதங்களாக சிரியா ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க வீரர்கள் நடத்திய உச்சக்கட்ட போர் நேற்று முடிவுக்கு வந்தது. அங்கிருந்த பயங்கரவாதிகள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். அந்நகரின்மீது நேற்று சிரியா நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

  இந்நிலையில், இந்த தாக்குதலுடன் சிரியா மண்ணில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை துடைத்தெறிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். எனினும். நைஜீரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், ‘அவர்களை முற்றிலுமாக தீர்த்துக்கட்டும் வரை அமெரிக்கா கண்காணிப்புடன் விழிப்பாக இருக்கும்’ எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  நமது நேசநாடுகளுடன் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும், தேவைப்படும் இடங்களில் எல்லாம் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கும். 

  இன்டர்நெட் மூலம் பரப்பப்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரசாரங்களை நம்பி சீரழியும் இளைய தலைமுறையினர் இனிமேலாவது உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு வேறு பாதையை கடைபிடிக்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

  சிரியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக அரசுப்படைகள் பெற்றுள்ள இந்த வெற்றிக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

  ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தில் இருந்து வெளியேறிய சிலர் சிரியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷீர் அல் ஆசாத் தலைமைக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களுடன் கடந்த 2011-ம் ஆண்டில் இணைந்தனர். 

  அவர்களின் துணையுடன் நவீனரக துப்பாக்கிகள், ராக்கெட்டுகள் ஆகியவற்றை சேகரித்து, ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்றிக் கொண்டு தங்களை நாடு கடந்த இஸ்லாமிய அரசு என ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரகடனம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இன்றைய நிலவரப்படி ஈராக், சிரியா உள்ளிட்ட சில நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் பாய்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து பதுங்கி இருப்பதாக கருதப்படுகிறது. இந்த இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் பக்தாதி கொல்லப்பட்டதாக பலமுறை செய்திகள் வெளியாகின. 

  ஆனால், பின்நாட்களில் அவை ஆதாரமற்ற தகவல்களாக புறக்கணிக்கப்பட்டன. இருப்பினும், சிரியா அல்லது ஈராக்கில் உள்ள மலைக்குகைகளில் அபுபக்கர் பக்தாதி உள்ளிட்ட சில முக்கிய தளபதிகள் மறைந்து வாழ்வதாக அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது. #Trumphails #IslamicStatecaliphate #fallofIS #IslamicStateinSyria
  ×