search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Face Stalin"

    • பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினில் இருந்து புறப்படுகிறேன்.
    • ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஸ்பெயினின் தொழில் துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற் கொண்டேன். இந்தியாவின் உற்பத்தி மையமான தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது.

    நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும்.

    இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினில் இருந்து புறப்படுகிறேன், சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன், இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்.

    இவ்வாறு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது.
    • புதிய நீதிமன்றங்களுக்கேற்ப தேவையான நீதிபதிகளை நியமிக்க போதிய நிதி ஒதுக்கியுள்ளோம்.

    மதுரை:

    மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர்.

    மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.

    மதுரை கோர்ட்டில் நடந்த கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகத்தில் நீதித்துறை கட்டமைப்பு பிற மாநிலங்களை காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் நிலை வரும். தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக வழக்குகளை விரைவாக முடிக்க முடியும்.

    நீதித்துறை கட்டமைப்பில் தி.மு.க.அரசு தொலைநோக்குடன் செயல்படுகிறது. புதிய நீதிமன்றங்களுக்கேற்ப தேவையான நீதிபதிகளை நியமிக்க போதிய நிதி ஒதுக்கியுள்ளோம். 3 மாவட்ட நீதிமன்றம் உள்பட 44 நீதிமன்றம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட கல்லூரியை பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக பதிவு செய்த 1000 இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைபிடிக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியை ரூ.7 லட்சமாக இருந்தது. அது ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது-

    மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்ற வளாகம் ரூ.166 கோடிக்கு தொடங்கப்பட உள்ளது. 2 கீழ் தளம், தரைதளம், முதல் தளம், 2-ம் தளம், 3-ம் தளம் என கட்டப்பட உள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு மிகப்பெரிய இடமாக மதுரையே இருந்துள்ளது. சிலம்பதிகாரத்தில் சட்டம் பற்றி 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கூறப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்ற பின் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் முழுவதும் ஆன்லைன் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மனுதாக்கல் உருவாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 10 மொழியாக்கம் செய்ய உத்தரவிட்டது. அதில் சென்னை ஐகோர்ட்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழியாக்கத்தில் முதலிடத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஸ் பேசுகையில், "உலகில் எந்த பகுதியிலும் நடக்காத ஒரு சம்பவம் மதுரையில் நடந்தது. அதன் மூலம் கண்ணகி மதுரையில் நீதியை பெற்றுள்ளார். மன்னர் தவறாக நீதி வழங்கக்கூடாது என்பதற்கான நிகழ்வு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது" என்றார்.

    உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியம் பேசியதாவது:-

    மதுரை 3 விசயங்களுக்கு பெருமை வாய்ந்தது. முதல் விசயம் பெண்களை அதிகாரப்படுத்துவது. மதுரையில் மட்டுமே பெண்ணிடம் இருந்து ஆணுக்கு சக்தி கிடைக்கிறது. மற்ற நகரங்களில் ஆண்களிடம் இருந்து சக்தி கிடைக்கும்.

    இரண்டாவது தமிழ் இலக்கியம் வளர்த்த நகரம் மதுரை.

    சமண முனிவர்கள் நாலடியார் என்ற சங்க இலக்கியத்தை கொடுத்த ஊர் மதுரை. மேலும் மதுரை தூங்கா நகரமாக உள்ளது. மூன்றாவது மதுரை கோவில் நகரமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×