என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "erumbeeswarar temple"

    திருவெறும்பூர் அருகே மலைக்கோவிலில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடந்தது.
    திருவெறும்பூர் அருகே மலைக்கோவிலில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24-ந் தேதி திருக்கல்யாணமும், 27-ந் தேதி தேர்திருவிழாவும் நடந்தது.

    நேற்று தெப்பத்திருவிழா நடந்தது. விழாவில் கோவிலின் எதிரே உள்ள தெப்பகுளத்தில் நறுங்குழல்நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் எழுந்தருளி தெப்பகுளத்தில் 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது. 
    ×