என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode girl harassment"

    ஈரோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடுத்த காந்தி வீதியை சேர்ந்தவர் ராசு என்கிற சித்தராசு (வயது 39).

    இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

    அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற அவர் அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இதை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசு என்கிற சித்தராசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் ராசு என்கிற சித்தராசு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×