search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "English Channel"

    கிறிஸ்துமஸ் நாளில் ஆங்கிலக் கால்வாயின் வெவ்வேறு இடங்களில் தத்தளித்த 40 அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். #EnglishChannel #MigrantsRescued
    லண்டன்:

    உள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை காரணமாக சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக வெளியேறி, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்களில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், கிறிஸ்துமஸ் நாளன்று அகதிகள் பலர், படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைய முயன்றுள்ளனர். ஆட்கடத்தும் கும்பல் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பாதுகாப்பு உடை அணியாமல் சாதாரண படகில் பயணம் செய்துள்ளனர். ஒரு படகு பழுதடைந்ததால் அதில் பயணித்தவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.



    இதையடுத்து, கடலோர காவல்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவும், படகுகளில் சென்றும் அவர்களை மீட்டனர். இவ்வாறு ஆங்கிலக் கால்வாயின் 5 இடங்களில் இருந்து 2 குழந்தைகள் உள்ளிட்ட 40 அகதிகள் மீட்கப்பட்டனர்.

    மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள் 2 பேரும் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரியவர்கள் குடியேற்ற அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் சிலர்  ஈராக், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    இதேபோல் கடந்த சனிக்கிழமையன்று பிரிட்டன் நோக்கி சென்ற 16 அகதிகளை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மீட்டது குறிப்பிடத்தக்கது. #EnglishChannel #MigrantsRescued

    மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தோரைச் சேர்ந்த வாலிபர் கால்கள் செயலிழந்த நிலையிலும் தனது விடாமுயற்சியால் ஆங்கிலக் கால்வாயை நீச்சல் அடித்து கடந்து சாதனைப் படைத்துள்ளார். #EnglishChannel
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தோர் நகரைச் சேர்ந்தவர் சதேந்திர சிங் (29). மாற்றுத்திறனாளியான இவர் அரசு வேலையில் பணியாற்றி வருகிறார். இவரின் கால்களை செயலிழந்த நிலையில் உள்ளன. இருப்பினும் சிங் தனது முயற்சியை கைவிட வில்லை. விடாமுயற்சி விஸ்பரூப வெற்றி என்பதற்கு ஏற்ப சிங் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வந்தார். கடந்த மாதம் அரபிக்கடலில் 36 கி.மீ. தூரத்தை 5 மணி 43 நிமிடங்களில் கடந்தார். மாற்றுத்திறனாளியாக இந்த தூரத்தை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.


    இந்நிலையில், சுதேந்திர சிங் ஆங்கிலக் கால்வாயை கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 4 மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் சிங் 12 மணி நேரம் 26 நிமிடங்களில் கடந்தார். ஒரு மாற்றுத்திறனாளியான இவரின் சாதனை அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

    இதற்கு முன் கொல்கத்தாவைச் சேர்ந்த ரஹ்மான் பைடியா கிப்ரால்டார் கால்வாயை கடந்த முதல் மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், ஆசியக்கண்டத்தில் ஆங்கிலக் கால்வையை கடந்த முதல் மாற்றுத்திறனாளி என்ற சாதனையும் படைத்துள்ளார். #EnglishChannel

    ×