search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elegance credit"

    • ஆவணி ஞாயிறு தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.
    • நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்க ப்பட்டது தனி சிறப்பாகும்.

    இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைல க்காப்பு சாற்றப்ப டுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

    மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இதனால் அன்றைய தினம் திருவிழா போல் காட்சியளிக்கும்.

    இன்று ஆவணி மாத கடைசி ஞாயிற்றுகிழமை என்பதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிய தொடங்கினர்.

    பல பக்தர்கள் நேற்று இரவே கோவிலுக்கு வந்து தங்கினர். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலர் நடைபயணமாக வந்தனர்.

    நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஆவணி ஞாயிறு தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று மாரியம்மனுக்கு தாழம்பூ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்ப ட்டன. பக்தர்கள்

    நீண்ட வரிசையில்நின்று அம்மனை மனம்உருகி தரிசித்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மாவிலக்கு போட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.

    இன்று மதியம் வரை மாரியம்மனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

    இன்று முழுவதும் கணக்கி ட்டால் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்டுகடங்காத கூட்டம் காணப்படுவதால் ஒழுங்குப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×