search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electrical shock death"

    பெருங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    பெருங்குடி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). பால் வியாபாரி. இன்று அதிகாலை அவர் ராஜீவ்காந்தி சாலை வழியாக கல்லுக்குட்டை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது தொடர்மழை மற்றும் சூறை காற்று காரணமாக அப்பகுதியில் சென்ற மின்வயர் அறுந்து சாலையில் கிடந்தது. இதனை கவனிக்காத சரவணன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இறங்கினார்.

    அப்போது அங்கு தேங்கிய மழைநீரில் பாய்ந்து இருந்த மின்சாரம் சரவணன் மீது பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்மாயில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் இவரது மனைவி புவனா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    புவனா இன்று காலை வீட்டில் உள்ள துணிகளை துவைத்து வீட்டின் மேற்கூரையின் மீது காயபோட்டுள்ளார். அப்போது அருகே சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது தவறுதலாக கைபட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    செங்கம் அடுத்த முன்னூர் மங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து ராஜேந்திரன் பலியானார்.

    கோடியக்கரையில் மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55). மீனவர். இவர் இன்று காலை 5 மணி அளவில் மீன்பிடிக்க செல்வதற்காக கடற்கரைக்கு சென்றார்.

    அப்போது ஆடிகாற்றில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல், தாசில்தார் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான சக்தி வேலுக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், தேவிகா என்ற மகளும், அருணகிரி என்ற மகனும் உள்ளனர். மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவ கோடிக்கரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்துக்கு மீனவாரிய ஊழியர்கள் சென்று மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×