search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly woman chain theft"

    சுசீந்திரம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    சுசீந்திரம் மணிக்கட்டி பொட்டல் பகுதியை சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி அருமைலெட்சுமி (வயது 60).

    இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து மீன் வாங்குவதற்காக சின்னனைந்தான் விளைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மீன் வாங்கிக்கொண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ரைஸ் மில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டியின் அருகில் வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அவரிடம் பேச்சு கொடுப்பது போல் நடித்து மூதாட்டி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அருமை லெட்சுமி செயினை பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டார். ஆனால் அந்த வாலிபர் அவரது கையை தட்டிவிட்டு விட்டு செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பிரசாத் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் மூதாட்டி கூறிய அடையாளங்களை வைத்து அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டார் மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50). இவரது மகள் உமா. இவரது கணவர் வெளியூர் சென்று இருப்பதால் உமா தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று உமா தூங்கிக்கொண்டு இருக்கும்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று உமாவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார். கண்விழித்து பார்த்தபோது மர்மநபர் ஒருவர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூச்சலிட்டு அலறினார். இதில் கொள்ளையனின் கையில் 3½ பவுன் சிக்கியது. மீதி 3 பவுன் செயின் உமாவின் கையில் இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்துவந்தனர். அதற்குள் அந்த கொள்ளையன் 3½ பவுன் செயினுடன் தப்பிச் சென்றான்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×