என் மலர்

  நீங்கள் தேடியது "El Clasico"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல் கிளாசிகோ போட்டியில் சுவாரஸ் ஹாட்ரிக் கோலால் ரியல் மாட்ரிட்டை 5-1 என துவம்சம் செய்தது பார்சிலோனா. #Laliga #Barcelona #RealMadrid
  எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் இடையிலான லா லிகா லீக் ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது. பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

  ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் கவுட்டினோ முதல் கோலை பதிவு செய்தார். 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி சுவாரஸ் கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேரத்தில் 2-0 என முன்னிலை பெற்றது.  2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோ கோல் அடித்தார். அதன்பின் பார்சிலோனா வீரர்கள் நம்பமுடியாத வகையில் விளையாடினார்கள். சுவாரஸ் 75-வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார். 83-வது நிமிடத்தில் எளிதாக மேலும் ஒரு கோல் அடித்தார்.
  சுவாரஸ் ஹாட்ரிக் கோலால் பார்சிலோனா 4-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 87-வது நிமிடத்தில் விடால் தலையால் முட்டி கோல் அடிக்க 5-1 என ரியல் மாட்ரிட்டை துவம்சம் செய்தது பார்சிலோனா.
  ×