என் மலர்

  நீங்கள் தேடியது "ducati streetfighter v4 sp"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்டிரீட்பைட்டர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த மாடலின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.

  டுகாட்டி நிறுவனம் சக்திவாய்ந்த ஸ்டிரீட்பைட்டர் V4 SP ஹைப்பர் நேக்கட் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V4 SP மாடலின் விலை ரூ. 34 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் ஸ்டாண்டர்டு மற்றும் S வேரியண்ட்களை விட முறையே ரூ. 14 லட்சம் மற்றும் ரூ. 10 லட்சத்து 76 ஆயிரம் அதிகம் ஆகும்.

  புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V4 SP மாடலின் மொத்த எடை 196 கிலோ ஆகும். இந்த பைக்கின் ஸ்டாப்பிங் பவர் பிரெம்போ ஸ்டைல்மா ஆர் கேலிப்பர்கள் மூலம் பெறுகிறது. இதன் சஸ்பென்ஷனுக்கு ஒலின்ஸ் NIX-30 முன்புற ஃபோர்க்குகள், TTX36 ரியர் ஷாக் அப்சார்பர் மற்றும் ஒலின்ஸ் ஸ்டீரிங் டேம்ப்பர் மற்றும் ஒலின்ஸ் ஸ்மார்ட் EC 2.0 சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.


  இந்த மாடலில் 1103சிசி டெஸ்மோசிடிசி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 105 ஹெச்.பி. பவர், 123 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் கார்னரிங் ஏ.பி.எஸ்., டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்லைட் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், லான்ச் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.

  இந்திய சந்தையில் புதிய டுகாட்டி ஸ்டிரீட்பைட்டர் V4 SP மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு நாடு முழுக்க டுகாட்டி விற்பனை மையங்களில் மேற்கொள்ள முடியும். வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

  ×