search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drunk and Drive"

    • வேனில் சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது பள்ளி வேன் மோதியது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள குங்குமம் பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி வாகன ஓட்டுனநராக கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த மணி என்பவரது மகன் பிரவீன் குமார் (வயது 31) என்பவர் கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக்குச் சொந்தமான வேனில் சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் - பல்லடம் மெயின் ரோட்டில் பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    கரையாம்புதூர் என்ற இடம் அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது பள்ளி வேன் மோதியது. இதில் காரின் பின்புற கண்ணாடி உடைந்தது. பள்ளி வேனுக்குள் இருந்த குழந்தைகள் நிலை தடுமாறி அய்யோ அம்மா என்று அலறினர். இந்த நிலையில் வேனை நிறுத்தாமல் மீண்டும் வேகமாக பிரவீன் குமார் செலுத்தியுள்ளார்.

    இதை அடுத்து விபத்து ஏற்பட்ட கார் உரிமையாளர், பள்ளி வேனை துரத்தி ராயர் பாளையம் என்ற இடத்தில் மடக்கி பிடித்தார். பின்னர் வேனிலிருந்து ஓட்டுனரை இறங்கச் செய்தபோது, அவர் குடிபோதையில் நிதானம் இன்றி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்த பொது மக்களிடம் இது குறித்து தெரிவித்தார்.

    அவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். வேறு வாகனம் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

    குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர், அதிர்ஷ்டவசமாக சிறிய விபத்தினால் பள்ளி வேனில் இருந்த குழந்தைகள் உயிர் தப்பினர். இதுவே குடிபோதை ஓட்டுனரால் பெரிய விபத்து ஏற்பட்டு இருந்தால், வேனில் இருந்த 15 குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும் என அதிர்ச்சியுடன் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ShakthiVasu
    இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி. இவர் சின்ன தம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்திருந்தார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திர வேடங்களில் நடித்துள்ளார்.

    கடந்த 2007-ல் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பின்னர் நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன், ஏதோ செய்தாய் என்னை, தற்காப்பு, சிவலிங்கா, 7 நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.



    இந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த நடிகர் சக்தி சாலையில் சென்றவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்று உள்ளார்.

    இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி சென்று அவரை பிடித்துள்ளனர். இதுபற்றி அவர்கள் போலீசாரிடமும் தெரிவித்து உள்ளனர். அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் சக்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #ShakthiVasu

    ×