search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drumstick seeds"

    • இன்னும், 40, 50 ஆண்டுகளுக்கு தான், புதைபடிவ எரிபொருள் கிடைக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
    • முருங்கை சாகுபடிக்கு அதிகளவு முதலீடு தேவையில்லை.

    வெள்ளகோவில் :

    இன்றைய சூழலில் வீடுகள் துவங்கி வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் என அனைத்திற்குமான தேவைகளில் எரிபொருள் முக்கியமானது. புதைபடிவ எரிபொருள் எனப்படும் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை தான் பிரதான எரிபொருளாக உள்ளன. இவ்வகை எரிபொ ருளால் எழும் புகையால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசடையும் நிலையில் சோலார் மின்னாற்றல், தாவர எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பயோ டீசல் ஆகியவை ஊக்குவிக்க ப்படுகின்றன.இன்னும், 40, 50 ஆண்டுகளுக்கு தான், புதைபடிவ எரிபொருள் கிடைக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் மாற்று எரிபொருளுக்கான திட்டங்களை செயல்படுத்தி, அதற்கான உற்பத்தியிலும் ஈடுபட துவங்கிவிட்டன. இதில் பயோ டீசல், முன்னிலையில் உள்ளது. இவ்வகை எரிபொருள், மோட்டார் எந்திரங்களுக்கு மிகவும் உகந்தது. சுற்று ச்சூழலும் மாசடைவதில்லை என கூறப்படுகிறது.

    அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, சீனா போன்ற நாடுகள் பயோ டீசல் தயாரிப்பில் முன்னி லை வகிக்கின்றன. பயோ டீசல் தயாரிக்க 25க்கும் மேற்பட்ட தாவரங்களை பயன்படுத்த முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில் முருங்கையில் இருந்து தயாரிக்கப்படும் பயோ டீசல் சிறந்தது என்ற தகவல் தான் ஆச்சர்ய மளிப்பதாக உள்ளது. உற்பத்தி செலவும் குறைவு என்கின்றனர்.மிக வேகமாக வளரும் தன்மை கொண்ட முருங்கை சாகுபடிக்கு அதிகளவு முதலீடு தேவையி ல்லை. உலகளவில் முரு ங்கை உற்பத்தியில் 80 சதவீதம் நம் நாடு பங்களி க்கிறது.முருங்கை விதையில் இருந்து பயோ டீசல் தயாராகிறது. 3,000 கிலோ முருங்கை விதையில் இருந்து 2,000 லிட்டர் பயோ டீசல் தயாரிக்கலாம் என்கின்றனர் நைஜீரிய ஆய்வாளர்கள்.

    இது குறித்து திருப்பூர் விவசாய சங்கத்தினர், விவசாயிகள் கூறுகையில், விவசாய விளைபொ ருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், ஆண்டு முழுக்க வருமானம் பெறவு ம், அவற்றை மதிப்புக்கூட்ட வேண்டும் என அரசு ஊக்குவிக்கிறது. முருங்கையில் இருந்து பயோ டீசல் தயாரிக்கலாம் என்ற தகவல், முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் விஷயம்.திருப்பூரில் பொங்கலூர், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை சாகுபடி பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த விஷயத்தை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

    • 40, 50 ஆண்டுகளுக்கு தான், புதைபடிவ எரிபொருள் கிடைக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
    • சுற்றுச்சூழலும் மாசடைவதில்லை என கூறப்படுகிறது.

    வெள்ளகோவில் :

    இன்றைய சூழலில் வீடுகள் துவங்கி வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் என அனைத்திற்குமான தேவைகளில் எரிபொருள் முக்கியமானது. புதைபடிவ எரிபொருள் எனப்படும் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை தான் பிரதான எரிபொருளாக உள்ளன. இவ்வகை எரிபொருளால் எழும் புகையால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசடையும் நிலையில் சோலார் மின்னாற்றல், தாவர எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பயோ டீசல் ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன.இன்னும், 40, 50 ஆண்டுகளுக்கு தான், புதைபடிவ எரிபொருள் கிடைக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

    உலகின் பல நாடுகள் மாற்று எரிபொருளுக்கான திட்டங்களை செயல்படுத்தி, அதற்கான உற்பத்தியிலும் ஈடுபட துவங்கிவிட்டன. இதில் பயோ டீசல், முன்னிலையில் உள்ளது. இவ்வகை எரிபொருள், மோட்டார் எந்திரங்களுக்கு மிகவும் உகந்தது. சுற்றுச்சூழலும் மாசடைவதில்லை என கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, சீனா போன்ற நாடுகள் பயோ டீசல் தயாரிப்பில் முன்னிலை வகிக்கின்றன. பயோ டீசல் தயாரிக்க 25க்கும் மேற்பட்ட தாவரங்களை பயன்படுத்த முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில் முருங்கையில் இருந்து தயாரிக்கப்படும் பயோ டீசல் சிறந்தது என்ற தகவல் தான் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது. உற்பத்தி செலவும் குறைவு என்கின்றனர்.மிக வேகமாக வளரும் தன்மை கொண்ட முருங்கை சாகுபடிக்கு அதிகளவு முதலீடு தேவையில்லை. உலகளவில் முருங்கை உற்பத்தியில் 80 சதவீதம் நம் நாடு பங்களிக்கிறது.

    முருங்கை விதையில் இருந்து பயோ டீசல் தயாராகிறது. 3,000 கிலோ முருங்கை விதையில் இருந்து 2,000 லிட்டர் பயோ டீசல் தயாரிக்கலாம் என்கின்றனர் நைஜீரிய ஆய்வாளர்கள். இது குறித்து திருப்பூர் விவசாய சங்கத்தினர், விவசாயிகள் கூறுகையில், விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், ஆண்டு முழுக்க வருமானம் பெறவும், அவற்றை மதிப்புக்கூட்ட வேண்டும் என அரசு ஊக்குவிக்கிறது. முருங்கையில் இருந்து பயோ டீசல் தயாரிக்கலாம் என்ற தகவல், முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் விஷயம்.திருப்பூரில் பொங்கலூர்,வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை சாகுபடி பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த விஷயத்தை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

    ×