என் மலர்
நீங்கள் தேடியது "drought tolerant cashews in"
- பழங்குடியின மக்கள் கேழ்வரகு பயிரை அதிகமாக சாகுபடி செய்கின்றனர்.
- கேழ்வரகு பயிரில் ஒரு ஏக்கருக்கு 900 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி பர்கூர், கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் ராகி, பீன்ஸ், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் 4 ஆயிரம் ஹெக்டேரில் கேழ்வரகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை க்கழகம் அத்தியந்தல் 1 என்ற புதிய ரக கேழ்வரகை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ரக கேழ்வரகு பர்கூர் மலைப்பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் முதல் முறையாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உழவியல் விஞ்ஞானி சரவணகுமார் கூறியதாவது:-
ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களது உணவுக்காக கேழ்வரகு பயிரை அதிகமாக சாகுபடி செய்கின்றனர்.
ஏற்கனவே அவர்கள் பயிரிட்ட கேழ்வரகு பயிரில் ஒரு ஏக்கருக்கு 900 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. தற்போது புதிதாக அறிமுகப் படு த்தப்பட்டுள்ள அத்தியந்தல் 1 என்ற ரகத்தில் ஏக்கருக்கு 1,500 கிலோ மகசூல் கிடைக்கு ம் என கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முதல்முறையாக பர்கூர் அருகே கொங்காடை கிராமத்தில் 10 ஏக்கரில் புதிய ரக கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பயிர் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது. பலத்த காற்று வீசும் போது எளிதில் சாய்ந்து விடாது.
நோய் எதிர்ப்பு திறன் மிக்கது. எனவே விவசாயி களும் ஆர்வமாக இந்த பயிரை சாகுபடி செய்து ள்ளனர். அவர்களுக்கு ஒருங்கிணைந்த சாகுபடி தொழில்நுட்பம் குறித்து செய்திகள் முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






