search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dredging works"

    • உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது.
    • மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

    மடத்துக்குளம்

    உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாக்களின் முக்கிய பாசன நீராதாரமாக அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 63 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கால்வாய் மூலம் 25 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேரடியாக பலனளித்து வருகிறது. இதுதவிர நிலத்தடி நீராதாரத்தை உயர்த்துவதற்கு உதவுவதன் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்துக்கு கைகொடுக்கிறது.

    இந்தநிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் பிரதான கால்வாயில் பல இடங்களில் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் கால்வாயின் கரையில் மட்டுமல்லாமல் கால்வாயின் உள்ளேயும் குப்பைகளை கொட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் கால்வாயில் தேங்கும் குப்பைகள் மற்றும் பாலிதீன் கழிவுகள் நீர் திறப்பின்போது மடைகளில் அடைப்பை ஏற்படுத்துவதால் பெருமளவு நீர் வீணாகிறது. அத்துடன் கழிவுகளால் விளைநிலங்களும் வீணாகும் நிலை உள்ளது.மேலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மண் குவியல் நிறைந்து பாசன நீர் செல்வதில் தடைகளை ஏற்படுத்துகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மடத்துக்குளம் பகுதியில் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் அமராவதி பிரதான கால்வாயை தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை கைகொடுக்காத நிலையில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைப்பயிர்களை காப்பாற்ற போராடும் நிலை உள்ளது.எனவே அமராவதி அணையிலிருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில் தற்போது 64.87 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவான இருப்பேயாகும்.

    பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகாமல் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கும் முழுமையாக போய் சேர வேண்டியது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டு கால்வாய் தூர்வாரப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.ஆனால் கிருஷ்ணாபுரம் முதல் துங்காவி வரையிலான குறைந்த தூரத்துக்கு மட்டுமே தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. எனவே கால்வாயை முழுமையாக தூர்வாரவும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருவாரூர் மாவட்டத்தில் கொத்தங்குடி, பேரளம் கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    திருவாரூர்:

    டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். 

    காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆறுகள், வாய்க்கால்கள்மற்றும் வடிகால்களைதூர்வாரு வதற்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டு தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு 683 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 916 எந்திரங்களை கொண்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளைதற்போது பணிபுரியும் செயற்பொ றியா ளர்களோடுகூடுத லாக பிறவட்டம் மற்றும்கோ ட்டங்க ளிலிருந்து பொறியா ளர்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தூர்வாரும் பணிகள் நடைபெற்ற பாசன பகுதிகளில் தினந்தோறும் பணிகளை மேற்பார்வையிட ஒவ்வொரு பணிக்கும் விவசாய பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர், உதவி மேலாண்மை அலுவலர், பஞ்சாயத்து செயலர் மற்றும் நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் அடங்கிய உழவர் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. தூர்வாரும் பணிகள் சீரிய முறையில் நடைபெற தமிழ்நாடு அரசின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டு 100 சதவீத பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

    இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், மேட்டூரிலிருந்து திறக்க ப்பட்ட தண்ணீர் விரைவில் கடைமடை வரை பாசனத்திற்கு சென்றடைய உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மேட்டூர் அணை கட்டப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு வழக்கமான தண்ணீர் திறக்கும் நாளான ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக முதல்முறையாக மே 24-ல் குறுவை பாசனத்திற்காக முதலமைச்சர் தண்ணீர் திறந்து வைத்தார்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளும் தமிழ்நாடு அரசின் வாயிலாக சிறப்பாக மேற்கொள்ள ப்பட்டுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி அதிக ரிக்கும் என எதிர்பா ர்க்கப்படுகிறது.

    சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முன்கூட்டியே துவக்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் காக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதால் கோடை பயிர் வகைகள், அதிக அளவில் சாகுபடி செய்ய இயலும். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கொத்தங்குடி கிராமம், கொத்தங்குடி வாய்க்காலில் ரூ.9.95 லட்சம்மதிப்பீட்டில் 5 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.

    இதனால் சுமார் 232 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், இதன்மூலம் கொத்தங்குடி, கடுவங்குடி ஆகிய கிராமங்கள் பயன்பெறுகின்றன. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் கிராமம், பேரளம் வாய்க்காலில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் 4.00 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதனால் சுமார் 177 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், இதன்மூலம் பேரளம் மற்றும் வீராநத்தம் கிராமங்கள் பயன்பெறுகின்றன.

    இந்த ஆய்வுகளின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர சக்கரபாணி, சிவ.வீ. மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ.மதிவாணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×