search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draft voter"

    • கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • விண்ணப்பிக்க ஏதுவாக 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமை களில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

    சேலம்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    1.01.2024- ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெறவுள்ளது.

    இது குறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    தற்போது சேலம் மாவட்டத்தில் வெளியி டப்பட்டுள்ள 11 தொகுதி களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14,41,717 பேர் , பெண்கள் 14,50,621 பேர், இதரர் 271 பேர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 28,92,609 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணி களுக்கான படிவங்கள் 27.10.2023 முதல் 9.12.2023 வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும், Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    1.01.2024 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6 - ம், பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7- ம், குடியிருப்பை மாற்றியதற்கும், நடப்பு வாக்காளர் பட்டியலுள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கும், மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பதற்கும் படிவம் 8 -யை பயன்படுத்த வேண்டும்.

    மேலும் இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்ததில் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 1.04.2024, 1.07.2024 மற்றும் 1.10.2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக 4.11.2023, 5.11.2023 மற்றும் 18.11.2023, 19.11.2023 ஆகிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று க்கிழமை களில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். 9.12.2023 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்ப ட்டு 5.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×