என் மலர்
நீங்கள் தேடியது "Doctorate Degree"
- ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடான சுலோவாகியா சென்றுள்ளார்.
- அவர் அங்குள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டார்.
நித்ரா:
ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடான சுலோவாகியா சென்றுள்ளார். நேற்று அவர் அங்குள்ள கான்ஸ்டன்டைன் பல்கலைக்கழக வளாகத்தைப் பார்வையிட்டார்.
பொது சேவையில் ஜனாதிபதியின் சிறந்த பணிகளைப் பாராட்டி, அந்த பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
மேலும் நிர்வாகம், சமூக நீதிக்கு குரல் கொடுத்தல் மற்றும் உள்ளடக்கிய பணிகளுக்காக இந்தப் பட்டத்தை வழங்கியதாக பல்கலைக்கழகம் பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி, 'தத்துவ ஞானி செயிண்ட் கான்ஸ்டன்டைன்சிரிலின் பெயர் கொண்ட ஒரு நிறுவனத்தில் பட்டம் பெறுவது, மொழி, கல்வி மற்றும் தத்துவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளின் காரணமாக மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது என மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் அவர், கல்வி என்பது தனிநபர் அதிகாரமளிப்புக்கு மட்டுமின்றி, தேசிய வளர்ச்சிக்கும் ஒரு வழிமுறை என்றும் கூறினார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது.
இது தொடர்பாக பல்கலை கழகம் சார்பில் டெண்டுல்கரை அணுகி கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து தெரிவித்தனர். ஆனால் டாக்டர் பட்டத்தை ஏற்க டெண்டுல்கர் மறுத்துவிட்டார்.
இதுகுறித்து ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணை வேந்தர் சுரஞ்சன் தாஸ் கூறியதாவது:-
டெண்டுல்கருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டு அவரை அணுகினோம். ஆனால் டாக்டர் பட்டத்தை ஏற்க முடியாததற்கான காரணங்களை இ-மெயில் மூலம் தெரிவித்தார்.
அதில், எந்த ஒரு பல்கலைக்கழகமும் வழங்கும் டாக்டர் பட்டத்தை தான் ஏற்பதில்லை என்றும், ஆக்ஸ் போர்ட்டு பல்கலைக்கழக வழங்கிய பட்டத்தையும் ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார் என்றார்.
டெண்டுல்கர் டாக்டர் பட்டத்தை நிராகரித்து உள்ளதால் கொல்கத்தா பல்கலைக்கழகம் அதை 5 முறை உலக சாம்பியான குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
டிசம்பர் 24-ந்தேதி நடக்கும் பல்கலை கழகத்தின் 63-வது பட்டம் அளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. #SachinTendulkar






