என் மலர்
நீங்கள் தேடியது "Dispute in a temple"
- கோவில் சாவியை யார் வைத்திருப்பது என்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
- 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே ரெட்டியார்சத்திரம் முருநெல்லிக்கோட்டையில் பெருமாள்கோவில் மற்றும் பட்டாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சாவியை யார் வைத்திருப்பது என்பதில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து சக்திமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் வீரம்மாள் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் என மொத்தம் இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






