என் மலர்

  நீங்கள் தேடியது "Disaster Risk Reduction Day"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்று பேசினார்.
  • தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.

  திருச்செந்தூர்:


  திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும், திருச்செந்தூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையமும் இணைந்து சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தினை நடத்தினர்.

  கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். பேராசிரியர் நெல்சன்துரை அறிமுக உரையாற்றினார். திருச்செந்தூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் ராஜமூர்த்தி பேரிடர்கள் பற்றியும், அவற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு விளக்கினார்.

  பின்னர் சிறப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராதாகிருஷ்ணன், வீரச்செல்வன், சேகர், விமல் இம்மானுவேல் ஆபிரகாம், இசக்கி, ஆஸ்டின் ஆகியோர் வெள்ளம், புயல், தீ, பூகம்பம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடர்களில் எவ்வாறு பொதுமக்கள் தங்கள் உயிர்களை காத்து கொள்வது, அதேபோல் எவ்வாறு மீட்புப் பணிகளை மேற்கொள்வது என்பன குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.

  நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் நன்றி கூறினார்.

  ×