search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disaffected"

    • ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சரை கலெக்டர் அழைத்து செல்லாததால் தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்தனர்.
    • அமைச்சர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    தமிழக அரசின் நிலமீட்பு நடவடிக்கை தொடர்பாக பேட்டி அளிப்பதற்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 2 நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் ஜெயசீலன் அலுவலகத்தில் இல்லை. இந்த நிலையில் அமைச்சர் மட்டும் தனியாக பேட்டி அளித்து சென்றார்.

    கலெக்டர் ஜெயசீலன் நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் ஆய்வு பணிக்காக சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கூட்டங்கள் நடக்கும்போது அமைச்சர் பங்கேற்றால், கலெக்டர் அவரை வரவேற்று அழைத்து செல்வது மரபு.

    அதன்படி அமைச்சர் கலெக்டர் வருகைகாக காரில் சிறிது நேரம் காத்திருந்தார். ஆனால் கலெக்டர் வராததால் அதிருப்தி அடைந்த அமைச்சர் விருந்தினர் மாளிகைக்கு சென்று விட்டார். அமைச்சரை கலெக்டர் அங்கு சென்று சந்தித்தார். அப்போது, ஏன் அரசு நடைமுறைகளை மாற்றுகிறீர்கள்? என்று கலெக்டரிடம் அமைச்சர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதன் பின்னர் அமைச்சரை கூட்டத்திற்கு கலெக்டர் அழைத்து சென்றார். அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது. மூத்த அமைச்சரை கலெக்டர் வந்து கூட்டத்திற்கு அழைத்து செல்லாததால் கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ×