search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "directorate of school eductation"

    ஆசிரியர்கள் பணியில் சேர நாளை காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். #JactoGeo #TeachersProtest
    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது.

    இந்நிலையில், இன்றோடு அவகாசம் முடிந்த நிலையில், நாளை காலை 9 மணி வரை அவகாசம் நீடித்து செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில்,

    ஆசிரியர்கள் பணியில் சேர நாளை காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று பணியில் சேராவிட்டால், பணியாற்றிய இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படுமெனக் கூறப்பட்டிருந்தது.

    அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவர்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஆசிரியர்கள் மூலமாக நியமனம் செய்ய துறையின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    எம்.எம்.எஸ். வாட்ஸ் அப், தொலைபேசி அல்லது நேரிலோ தெரிவித்து விட்டு பணியில் சேரலாம். தங்கள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக பணியில் சேரலாம். நாளை பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு சேரலாம்.

    என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JactoGeo #TeachersProtest
    ×