என் மலர்
நீங்கள் தேடியது "direct admission"
- பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு இன்டர்சிப் டிரெய்னிங் வழங்கபடுகிறது.
- ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான சம்பளத்துடன் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கு 24.5.2023 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு ,12-ம் வகுப்பு,கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல், மேம்பட்ட தொழில் நுட்பபடிப்புகளான இன்டஸ்ட்ரி 4.0 மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
டாடா டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2877.43 கோடி செலவீட்டில் உலகத்தரம் வாய்ந்த இன்டஸ்ட்ரி 4.0 தரத்திலான டெக் சென்டர் – தொழில் நுட்ப மையங்களை உருவாக்கி உள்ளது.இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொழில் நுட்ப மையமாக மாற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட தொழில் நுட்ப மையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் இதர தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஐடிஐ.யில் பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் மற்றும் குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு டூல் கிட், தையல் எந்திரம் விலையில்லாமல் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் தகுதி வாய்ந்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்துடன் இணைந்து மாதாந்திர உதவித்தொகை ரூ.1750 வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு இன்டர்சிப் டிரெய்னிங் மற்றும் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான சம்பளத்துடன் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டையில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால், தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்தில் நேரடி சேர்க்கைக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0421-2429201,04258-230307 மற்றும் 04252-22334 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்துள்ளார்.
- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
- தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், மேட்டூர், கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவிமையம் செயல்பட்டு வருகிறது.
நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது செல்போன், ஈ மெயில் ஐ.டி., ஆதார் எண், அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முன்னுரிமை கோரினால் முன்னுரிமை சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். சாதிச் சான்றிதழ் இல்லையெனில் பொதுப்பிரிவில் தேர்ந்தெ டுக்கப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணம் மற்றும் இதரக் கட்டணம் ரூ.245 ஆகும், பயிற்சிக் கட்டணம் இல்லை.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் இதர அரசுச் சலுகைகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.
நேரடி சேர்க்கை வருகிற 30-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் குறுகிய கால தொழிற்பயிற்சிக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. ஓவ்வொரு நாளும் முதலில் வருபவர்களுக்கு முன்னிரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.






