search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dieying association"

    • சேவை வரியை திரும்ப பெறமுடியாததால் சாய ஆலைகளின் நடப்பு மூலதனம் பாதிக்கப்படுகிறது.
    • சேவைகளுக்கான உள்ளீட்டு வரியை கணக்கிட்டு ரீபண்ட் பெற விண்ணப்பிக்கமுடியும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சாய ஆலை சங்க தலைவர் காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கழிவுநீர் சுத்திகரிப்புக்காக திருப்பூர் சாய ஆலைகள், 12 சதவீதம் வரி செலுத்துகின்றன. பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கு செலுத்தப்படும் இந்த சேவை வரியை திரும்ப பெறமுடியாததால் சாய ஆலைகளின் நடப்பு மூலதனம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சாய ஆலை சங்கம் சார்பில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    பொதுசுத்திகரிப்பு மையங்களுக்கான 12 சதவீத வரியை 5 சதவீதமாக மாற்றவேண்டும் அல்லது சாய ஆலைகளுக்கான வரியை 5 ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் உள்ளீட்டு வரியை திரும்பப்பெறும் விதிமுறையில் மாற்றம் கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சேவைகளுக்கான உள்ளீட்டு வரியையும் கணக்கிட்டு ரீபண்ட் பெற விண்ணப்பிக்கமுடியும். இதற்காக, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சாய ஆலை சங்கம் நன்றி தெரிவிக்கிறது. அரசின் முறையான ஆணை வந்த பின், பொது சுத்திகரிப்பு மையங்கள், சாய ஆலைகளுக்கு எந்தெந்த வகையில் பயனளிக்கும் என தெரியவரும்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×