search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dhananjeyan"

    • அறிமுக இயக்குனரான மணிவர்மன் இயக்கத்தில் கடந்த மாதம் இறுதியில் ’ஒரு நொடி’ திரைப்படம் வெளியானது.
    • அமோஹம் பிக்சர்ஸ் சார்பாக சுபாஷினி மற்றும் வொயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பாக ரத்தீஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    அறிமுக இயக்குனரான மணிவர்மன் இயக்கத்தில் கடந்த மாதம் இறுதியில் 'ஒரு நொடி' திரைப்படம் வெளியானது.

    வெளியான இந்த படத்தில் 'தொட்டால் தொடரும்' பட நாயகனும் 'அயோத்தி' படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த தமன் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மதுரை அழகர் புரொடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். படம் வெலியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதிக்களத்தையும் திரைக்கதையை அமைத்தது படத்டின் கூடுதல் பலம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிவர்மன் மீண்டும் தமன் குமார் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார்.

    அமோஹம் பிக்சர்ஸ் சார்பாக சுபாஷினி மற்றும் வொயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பாக ரத்தீஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இன்று பாண்டிச்சேரியில் தொடங்கியது.

     

    மல்வி மல்ஹோத்ரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார், மைதிரேயா ரக்ஷா செரின், அருன் கார்த்தி, காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, சந்தான பாரதி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். படத்தின் தயாரிப்பாளரான ரத்தீஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சஞ்சய் மாணிக்கம் இசையமைக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எங்கள் நிறுவனம் மூலம் ஓடிடியில் விற்றுத் தந்தோம்.
    • பல படங்கள் ஓ.டி.டி.யில் வெற்றி பெற்றுள்ளது.

    போக்கஸ் ஸ்டூடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா கதையம்சம் கொண்ட திரைப்படமாக "வல்லவன் வகுத்ததடா" உருவாகி இருக்கிறது.

    ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும் போது, "சிறு தயாரிப்பு படங்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமென்பதே என் நோக்கம். என்னால் முடிந்தவரைத் தினமும் படங்கள் பார்த்து வருகிறேன். பல படங்களை எங்கள் நிறுவனம் மூலம் ஓடிடியில் விற்றுத் தந்தோம். எறும்பு முதலாகப் பல படங்கள் ஓடிடியில் வெற்றி பெற்றுள்ளது."

     


    "அந்த வகையில் தான் கேபிள் சங்கர் சொல்லி இந்தப்படம் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. விநாயக் துரை மிக அழகாகத் திரைக்கதை எழுதியுள்ளார். இதில் நடித்துள்ள ராஜேஷ் ஹைனாவின் வித்தியாசமான குணங்களோடு நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார்கள்."

    "நாயகி தமிழில் பேசி நடித்திருப்பது அருமை. வல்லவன் வகுத்ததடா தனித்துவமான படம். இது புதியவர்களின் முயற்சி, ஊடகங்களின் ஆதரவு வேண்டும் அது இருந்தால் தான் ஓ.டி.டி. பிசினஸ் செய்ய முடியும்," என்று தெரிவித்தார்.

    இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×