search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Development programs"

    • அரசு திட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று ஊராட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்படும் தீர்மானம் நிலையான ஒன்றாக இருக்கும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கல்லல் யூனியன், பனங்குடி கிராமத்தில் காந்தியடிகள் 154-வது பிறந்தநாளையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    அரசு திட்டத்தின் மூலம் மக்களின் வளர்ச்சிக்கும், ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் பயனாளிப்பட்டியல் தோ்வு செய்வதற்கும் கிராமச்சபைக் கூட்டம் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

    இந்த கூட்டத்தில் நிறைவே ற்றப்படும் தீர்மானம் நிலையான ஒன்றாக இருக்கும். அதன்படி, மக்கள் முன்னிலையில் ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்து எதிர்க்காலத் தேவைகளை நிறைவேற்ற பேசி முடிவு செய்ய இந்தக்கூட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

    ஊராட்சியினுடைய வளர்ச்சிக்கேற்ப பொது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வழங்க அரசு தயார்நிலையில் உள்ளது. பொதுமக்களாகிய நீங்கள் இது போன்ற திட்டங்களில் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், ஊராட்சியின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து, பி.நடராஜபுரம், ராமசாமி நினைவு அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் மரக்கன்று நட்டார். இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை கோட்டாட்சியர்(பொறுப்பு) ரத்தினவேல், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், பனங்குடி ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் அருண், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×