என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » deposited
நீங்கள் தேடியது "deposited"
மார்த்தாண்டம் பகுதியில் உள்ள வங்கியில் கள்ளநோட்டுகள் டெபாசிட் செய்தது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் கிளைக்கு மாநிலம் முழுவதிலும் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் பாதுகாப்பாக அனுப்பப்படுவது வழக்கம்.
இதுபோல மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் பாங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 8 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், 500 ரூபாய் நோட்டுகள் 8 -ம் என மொத்தம் ரூ.12 ஆயிரத்திற்கு கள்ளநோட்டுகள் இருந்ததை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுபற்றி சென்னை ரிசர்வ் பங்கியின் உதவி பொது மேலாளர் ரவீந்திரன் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் செய்தார். அதில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள வங்கியில் இருந்து டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் ரூ.12 ஆயிரத்திற்கு கள்ளநோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து உள்ளோம்.
அதனை வங்கியில் செலுத்தியவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இப்புகார் மனுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க எஸ்.பி.ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்படி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரிய பிரான்சிஸ்கா வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளார்.
இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கடந்த 2017-ம் ஆண்டில் குறிப்பிட்ட வங்கியில் அந்த பணத்தை டெபாசிட் செய்த நபர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
×

X