search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Debt Scheme Report"

    • விருதுநகரில் 2023-24-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்.
    • விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, விருதுநகர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ 9672.35 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது.

    இக்கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வங்கிகள் மதிப்பிடப்பட்ட கடன் திறன்களை உணர பின்பற்ற வேண்டிய யுக்திகள் இந்த திட்ட ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கிகள் தங்கள் இலக்குகளை அடைய திட்ட ஆவணத்தை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜா சுரேஷ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×