search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Debt relief camp at Virudhunagar"

    • விருதுநகரில் வருகிற 27-ந்தேதி கடனுதவி முகாம் நடக்கிறது.
    • ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.250 கோடியினை குறு-சிறு தொழில் கடனுதவிக்கென இலக்காக நிர்ணயித்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகரில் உள்ள தொழில் வர்த்தக சங்க மகாலில் வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு கடன் வசதி எளிமையாக்கல் முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடை பெற உள்ளது.இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளின் மண்டல மேலாளர்கள், வங்கி கிளை மேலாளர்கள், மானிய கடனுதவி திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வரும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வேளாண்மை மற்றும் உழவர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கைத்தறி துறை, தாட்கோ, டாப்செட்கோ, டாம்கோ, கதர் கிராம தொழில் ஆணையம், கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் பல்வகை கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகிய அனைத்து அமைப்பு களும் ஒருங்கிணைந்து அனைத்து துறை மானிய கடனுதவி திட்டங்களின் வரையறைகளை எடுத்துரைத்து அன்றைய தினமே கடன் தொகை விடுப்பு நடவடிக்கையினை மேற் கொள்ள உள்ளன.புதிதாக கடனுதவி கோரி விண்ணப்பிக்க உள்ளவர்க ளும், ஏற்கனவே விண்ணப்பித்து கடன் விடுவிப்பு ஆணையினை எதிர்நோக்கி உள்ள நபர்களும் மேற்கண்ட கடன் உதவி இயக்க முகாம் நடைபெறும் நாளான 27-ந்தேதி அன்றே கடனுதவி பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு வங்கி அமைப்புகளின் இசை வோடு விருதுநகர் மாவட்டத் திற்கென ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.250 கோடியினை குறு-சிறு தொழில் கடனுதவிக்கென இலக்காக நிர்ணயித்துள்ளது.

    எனவே குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சுயதொழில் தொடங்கிட மானிய கடனுதவி கோரி ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து தரப்பினரும் தொழிற் கடன் வேண்டி புதிதாக விண்ணப்பிக்க உள்ள நபர்களும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு உடனடியாக பயன்பெறலாம்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையம், பொது மேலாளரை நேரிலோ அல்லது 90800 78933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×