என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dead news"

    • புவனேஷ்வரி தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
    • புவனேஷ்வரி சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்னே பரிதாபமாக இறந்தார்

    கோவை,மே.22-

    கோவை தொண்டா முத்தூர் அருகே உள்ள குப்பேபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஷ்வரி (வயது25). தனியார் நிறுவன ஊழியர்.சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் குப்பேபாளை யத்தில் இருந்த தொண்டாமுத்தூர் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிள் வண்டிக்காரனூர் அருகே சென்றபோது அந்த வழியாக மாட்டுவண்டி சென்றது. திடீரென மாடு மிரண்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த புவனேஷ்வரி சம்பவ இடத்திலேயே கணவர் கண்முன்னே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பிரகாஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து சென்று இறந்த புவனேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×