என் மலர்

  நீங்கள் தேடியது "dawn on the"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பர்கூர் மலைப்பகுதியில் மழை விடிய விடிய கொட்டியது.
  • இந்த மழை வனப்பகுதியை குளிர வைத்துள்ளது.

  அந்தியூர்:

  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது.

  அக்னி நட்சத்திரம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முடிவுற்ற நிலையில் வெயி லின் தாக்கம்படிப்ப டியாக குறைய தொடங்கிய வருகிறது. இருப்பினும் சில பகுதிகளில் இன்னும் சதம் அடித்து வரும் வெயிலினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  இந்த நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டியது. இதனால் பர்கூர் மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  மேலும் இந்த மழையினால் மலைப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியுள்ளது.

  வனப்பகுதிகளுக்குள் விலங்குகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குட்டைகளில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள், வனப்பகுதி களுக்குள்ளேயே தாகத்தை தீர்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

  கடந்த 27 நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இந்த மழை வனப்பகுதியை குளிர வைத்துள்ளது.

  ×