search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "David Goffin"

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்களில் ஒருவரான டேவிட் கோபின் அதிர்ச்சிகரமாக தோற்றார். #FrenchOpen #DavidGoffin
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தற்போது தர வரிசையில் 20-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த பெர்னாண்டோ வெர்டஸ்கோவை எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் 2-ம் நிலை வீரர் ஸ்வேரேவ் (ஜெர்மனி), 7-வது வரிசையில் உள்ள டொமினிக் தியம் (ஆஸ்ரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். இருவரும் கால் இறுதியில் மோதுகிறார்கள்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரர்களில் ஒருவரான டேவிட் கோபின் (பெல்ஜியம்) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இத்தாலியை சேர்ந்த மார்கோ சேச்சினடோ 7-5, 4-6, 6-0, 6-3 என்ற கணக்கில் 8-ம் நிலை வீரான கோபினை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். அவர் கால் இறுதியில் ஜோகோவிச்சை எதிர் கொள்கிறார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), யூலியா புடின் சேவா (ரஷியா) ஆகியோர் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    இன்று நடைபெறும் 4-வது சுற்று ஆட்டங்களில் ஆண்கள் பிரிவில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்)- மேக்சிமிலன் மார்ட்டரர் (ஜெர்மனி), சிலிச் (குரோஷியா)- பேபியோ போகினி (இத்தாலி), டெல் போட்ரோ (அர்ஜென்டினா)- இஸ்னர் (அமெரிக்கா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா)-டியாகோ (அர்ஜென்டினா) மோதுகிறார்கள்.

    பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)- ‌ஷரபோவா (ரஷியா), ஷிமோனா ஹெலப் (ருமேனியா)- மெர்டன்ஸ் (பெல்ஜியம்), முகுருஜா (ஸ்பெயின்)- லெசியா (உக்ரைன்), கெர்பர் (ஜெர்மனி)-கார்சியா (பிரான்ஸ்) மோதுகிறார்கள்.

    இதேபோல் நேற்று பாதியில் நிறுத்தப்பட்ட வோஸ்னியாக்கி மோதும் ஆட்டமும் இன்று நடக்கிறது.#FrenchOpen #DavidGoffin
    ×