search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cycle sharing"

    மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் 6 இடங்களில் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் மணிக்கு 5 ரூபாய் கட்டணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. #Metrotrain #SmartCity
    சென்னை:

    சென்னை மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் நல்ல உடல் ஆரோக்கியத்துக்காக செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

    இத்திட்டத்தை செயல்படுத்தும் பணி ஐதராபாத்தை சேர்ந்த ‘ஸ்மார்ட்’ பைக் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஐதராபாத், டெல்லி, அமராவதி உள்ளிட்ட இடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    சென்னையில் முதற்கட்டமாக 6 இடங்களில் 60 ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் தொடங்கப்பட்டது. திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம், டவர் பூங்கா, அண்ணாநகர் கிழக்கு, சிந்தாமணி சந்திப்பு, வள்ளியம்மாள் உயர் நிலைப்பள்ளி, கந்தசாமி கல்லூரி ஆகிய இடங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டது.

    சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 25 இடங்களில் 250 சைக்கிள்கள் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தில் ஸ்மார்ட் போன் ‘ஆப்’ மூலம் ‘கியூ ஆர்’ கோடு மற்றும் பாஸ்வேர்ட் மூலம் சைக்கிள்களை எளிதில் பெறலாம். மணிக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டத்தால் சென்னையில் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம், உடல் வலுவாக அமைய இந்த சைக்கிள்கள் பயன் உள்ளதாக அமையும். பொதுமக்களிடம் சைக்கிள்கள் குறித்த விழிப் புணர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. #CycleSharing #Metrotrain #SmartCity
    ×