என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cuddalore amman statue rescue"

    கடலூர் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் கிடந்த ஒரு அடி உயரம் உள்ள அம்மன் சிலை மீட்கப்பட்டது. இது பற்றி ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் அருகே பெரியகங்கனாங்குப்பம் தென்பெண்ணையாற்றங்கரையில் கும்தாமேடு தரைப்பாலம் அருகே அம்மன் சிலை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தென்பெண்ணையாற்றங்கரைக்கு ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று அம்மன் சிலையை மீட்டனர். அந்த சிலை பித்தளையால் செய்யப்பட்டு இருந்தது. அது ஒரு அடி உயரமும், ¾ அடி அகலமும் 6 கிலோ எடையுமாக இருந்தது. அதனை ஆற்றங்கரையில் வீசிச்சென்றது யார்? என்பது தெரியவில்லை. இது பற்றி ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×