என் மலர்
நீங்கள் தேடியது "Creativity competitions"
- கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற்றது.
- இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.
ஈரோடு:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் படைப்பாற்றல் போட்டிகள் நடைபெற்றன.
மாணவர்களிடையே படைப்பாற்றல், பேச்சாற்றலை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஈரோடு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நடுவர்களாக பேராசிரியர்கள் இளங்கோவன், விஸ்வநாதன், தனசேகரன், தினேஸ்வரன், சரவணகுமார், குருமூர்த்தி, கண்ணன், தமிழ்செல்வி ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.
இதில் கவிதை போட்டியில் திண்டல் வேளாளர் கல்வியியல் கல்லூரி மாணவர் பிரதாப், கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவி ரஞ்சிதா, ஈரோடு சி.என்.கல்லூரி மாணவர் கார்த்தி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
கட்டுரை போட்டியில் ஈரோடு சி.என்.கல்லூரி மாணவி சந்தியா, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவி சந்தியா, கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவி கீர்த்தனாவும்,
பேச்சு போட்டியில் சி.என்.கல்லூரி மாணவி கவுரி மனோகரி, சித்தோடு வாசவி கல்லூரி மாணவர் வாஞ்சிநாதன், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவர் அமல் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
இவர்கள் முதல் பரிசாக ரூ.10,000, 2-வது பரிசாக ரூ.7,000, 3-வது பரிசாக ரூ.5,000 பெற்றனர்.






