என் மலர்
நீங்கள் தேடியது "C.Pa. Adithanar Memorial Day"
- சி.பா. ஆதித்தனாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- சி.பா. ஆதித்தனாரின் நினைவு நாளை பனைத் தொழிலாளர்கள் தினமாக தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு கடைபிடித்து வருகிறது.
சாம்பவர்வடகரை:
அகரகட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமை ப்பின் தலைமை அலுவல கத்தில் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 42-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் தலைவர் லூர்துநாடார் தலைமையில் பொதுச்செயலாளர் ஆனந்த் காசிராஜன், துணை செயலாளர் ஜான் டேவிட் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அகரக்கட்டு லூர்து நாடார் பேசிய தாவது:-
மே 24-ந் தேதியை தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு பனை தொழிலாளர்கள் தினமாக அறிவித்திருக்கிறது. ஏனென்றால் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சொன்ன தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் நினைவு தினம் ஆகும்.
தமிழக அரசு பனைமீது திணிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும் என்று 5 ஆண்டுகள் சட்ட மன்றத்தில் போராடியவர். மேலும் அன்றைய அரசு பனை வரியை ரத்து செய்ய முடியாது என்று சொன்ன காரணத்தினால், தான் வகித்த மேல்சபை உறுப்பி னர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு பனை தொழிலா ளர்களை ஒன்று சேர்த்து பல்வேறு போரா ட்டங்கள் நடத்தி பனைக்கு போடப்பட்ட வரியை ரத்து செய்ய வைத்தவர். பனை தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை பெற்றுக் கொடுத்தவர். தமிழ்நாட்டில் பனைத் தொழிலாளர்களுக்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த மாமனிதர் சி.பா. ஆதித்தனார். எனவே தான் அவரது நினைவு நாளை பனைத் தொழிலாளர்கள் தினமாக தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பு கடைபிடித்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பன்னீர், கடல்சாமி, புதுமை ஆல்பர்ட் பனை தொழிலாளர்கள் சங்க நிர்வாகி தனபால், திருச்சி காட்டூர் இளைஞர் அணி செயலாளர் வர்கீஸ் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






