என் மலர்
நீங்கள் தேடியது "covered with mud due to mixing of"
- போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
- இதில் விவசாயிகள், பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த நல்லூர் கிராமத்தில் புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள சாய ப்பட்டறை மற்றும் அப்பகுதி ரசாயன கழிவுகள் சாக்கடை வடிகாலில் கலப்பதாகவும் அந்த கழிவுகள் நல்லூர் குளத்தின் நீரில் கலப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து அதிகாரி களிடம் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என மக்கள் புகார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் புளியம்பட்டி எஸ்.ஆர்.டி. அருகே உள்ள நகராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் வடிகாலில் டிப்பர் லாரியில் மண் கொண்டு வந்து கழிவு நீர் வடிகாலை தடுத்து அடை த்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள், பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. குளத்தில் வந்து கழிவுநீர் கலப்பதால் மண்ணை கொட்டி அடைத்துள்ளோம் என தெரிவித்தனர்.
இதில் பொதுமக்கள் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






