என் மலர்
முகப்பு » cops injured
நீங்கள் தேடியது "cops injured"
மேற்கு வங்கம் மாநிலத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பாதுகாப்புக்கு சென்ற வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 2 போலீசர் காயமடைந்தனர். #MamataBanerjee #ConvoyOverturns
கொல்கத்தா:
மேற்கு வங்கம் மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் தக்ஷினேஸ்வரர் காளி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைவாக் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று தனது பாதுகாப்பு வாகனங்களுடன் அந்த கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
சலாப் என்ற இடத்தின் அருகே வரும்போது, முதல் மந்திரிக்கு பாதுகாப்பாக வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 போலீசார் காயம் அடைந்தனர். சக போலீசார் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன்பின்னர், முதல் மந்திரி மம்தா பானர்ஜி அங்கிருந்து தனது பயணத்தை தொடர்ந்தார்.
முதல் மந்திரி பாதுகாப்புக்கு சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. #MamataBanerjee #ConvoyOverturns
×
X