search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress administrators"

    கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக நிர்வாகிகளுக்கு மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Congress
    கரூர்:

    கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் கரூரில் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டம் தொடங்கியதும் சஞ்சய்தத், மாவட்ட தலைவர் சின்னசாமி, பேங்க் சுப்பிரமணி, ஸ்டீபன் பாபு ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென கீழே இருந்த சில நிர்வாகிகள் ஆளுக்கொரு நாற்காலியை தூக்கி கொண்டு மேடை நோக்கி வந்தனர். இதற்கு மேடையில் இருந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து நிர்வாகிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ந்த சஞ்சய்தத் அனைவரையும் அமைதி காக்கும்படி எச்சரித்தார். ஆனால் கூச்சல் நின்ற பாடில்லை. இதனால் வெறுத்து போனஅவர் நானே கீழே போய் அமருகிறேன் என பார்வையாளர் இருக்கையில் விறுவிறுவென சென்று உட்கார்ந்துவிட்டார்.

    இதனை சற்றும் எதிர்பாராத நிர்வாகிகள் வேறு வழி தெரியாமல் நாற்காலிகளை அங்கேயே போட்டுவிட்டு நேராக சஞ்சய்தத்தின் பின்னால் போய் இடம் பிடித்தனர். பின்னர் சஞ்சய்தத், மைக்கில் பேசுபவர்கள் மட்டும் ஒவ்வொருவராக மேடை ஏறி பேசுங்கள் என்றார். பின்னர் ராகுல் பாணியில் தன்னந்தனியாக பேசி சென்றனர்.

    அதன்பின்னர் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் பேசும்போது, 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாத சூழலில் இருக்கிறோமே என்கிற கவலை வேண்டாமா? இதை விடுத்து மேடையில் உட்காருவதற்காக போட்டி போடலாமா என சாடினார். மேலும் கட்சி கட்டுப்பாட்டினை மீறி ஒழுக்கக்கேடாக நடப்பவர்கள் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்புவேன் என எச்சரித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் சஞ்சய்தத் கூறும்போது, 2014 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை கூட மோடி நிறைவேற்றவில்லை. நடைபெற இருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இனி நமக்கு ஏறுமுகம் தான் என மகிழ்ச்சி தெரிவித்தார்.  #Congress

    ×