என் மலர்
நீங்கள் தேடியது "College Students Protets"
- மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்துதரக்கோரியும் மேலும் கல்வி கட்டணத்தை திருப்பித்தர வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னை:
சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி உள்ளது. அங்கு மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவ-மாணவிகள் இன்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்துதரக்கோரியும் மேலும் கல்வி கட்டணத்தை திருப்பித்தர வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.