என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collection of clues"

    • நவாப்ஜான் ரூ.10 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
    • திருடுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4.5 லட்சம் எனத் தெரிகிறது.

    கடலூர்:

    நெய்வேலியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை, பணம், மோட்டார் சைக்கிள் திருடு போனது. நெய்வேலியை அடுத்த வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் நவாப்ஜான் (வயது 60). இவர் தனது குடும்பத்தாருடன் வீட்டை பூட்டி விட்டு கடந்த 4-ந்தேதி சேலத்திற்கு சென்றார். அங்கு உறவினர் வீட்டு விசேஷத்தை முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருந்தது. வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

    இதில் அதிர்ச்சியடைந்த நவாப்ஜான், பீரோவை திறந்து பார்த்தார். இதில் வைக்கப்பட்டிருந்த 7½ பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தார் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை போக்கினர். திருடுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4.5 லட்சம் எனத் தெரிகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேர்க்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து கதவை உடைத்து நகை, பணம், மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×