என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cloth godown fire in Thuraipakkam"

    துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான துணி குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.
    சோழிங்கநல்லூர்:

    துரைப்பாக்கம் ராஜிவ் காந்தி சாலையில் தனியாருக்கு சொந்தமான துணி நெய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. சென்னையை சேர்ந்த அஜய் அகர்வால், இதன் உரிமையாளர் ஆவார். இங்கு நெய்யும் துணிகள் கடந்த 15 ஆண்டுகளாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இதன் அருகிலேயே, நிறுவனத்துக்கு சொந்தமான குடோனும் உள்ளது. குடோனில் நெய்யும் துணிகள் மற்றும் தயாரிப்புக்கு தேவையான நூல் மொத்தமாக, வைக்கப்பட்டுள்ளது.

    நேற்று இரவு 9 மணிக்கு குடோனில் இருந்து கரும்புகை வந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தெரிவித்தனர். அதற்குள், குடோனில் மளமளவென தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

    தகவலறிந்ததும் துரைப்பாக்கம், திருவான்மியூர் மற்றும் சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நிறுவனத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் நூல் தீக்கிரையானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×