search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Classic 350 Gunmetal Grey ABS"

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே ஏ.பி.எஸ். வேரியன்ட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #RoyalEnfield #motorcycle



    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 கன்மெட்டல் கிரே ஏ.பி.எஸ். வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கன்மெட்டல் கிரே ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ.1.80 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 350 சிக்னல்ஸ் எடிஷன் மாடல்களில் ஏ.பி.எஸ். வசதியை அறிமுகம் செய்தது. 

    புதிய கன்மெட்டல் கிரே ஏ.பி.எஸ். யூனிட்டில் டூயல்-சேனல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதே யூனிட் சிக்னல்ஸ் எடிஷனிலும் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலில் 280எம்.எம். மற்றும் 240எம்.எம். டிஸ்க் பிரேக் முறையே முன்பக்கம் மற்றும் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது.



    ஏ.பி.எஸ். தவிர புதிய மோட்டார்சைக்கிளின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. கிளாசிக் 350 ஏ.பி.எஸ். மாடலில் 346சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலில் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 650 ட்வின் மாடல்களிலும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 650 இன்டர்செப்டார் மற்றும் 650 கான்டினென்டல் மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 14ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி இருக்கிறது. இந்நிலையில், இதன் விலை ரூ.3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×